Niroshini / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்
திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தொருவரை இன்று வியாழக்கிழமை காலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அபேரத்ன என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
பாலையூற்று பிரதேசத்தில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரொருவரின் மனைவியுடன் தொலைபேசி மூலம் வைத்திருந்த தொடர்பு காரணமாகவே குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
புலனாய்வுத்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தர் அழைப்பு விடுத்த தொலைபேசி பட்டியலை சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே இவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
6 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago