Niroshini / 2015 நவம்பர் 02 , மு.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் 'செமட செவன' வேலைத்திட்டத்தின் கீழ் இன்று (02) திருகோணமலை மாவட்டத்தில் மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் புதிய வீட்டுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.
கோமரங்கடவெல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்யாணபுர கிராமம்.குச்சவௌி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் கிராமம் மற்றும் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இக்பால் நகர் கிராமம் ஆகியவற்றுக்கு தலா 25 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார,தேசிய வீடமைப்பு அதிகார சபையின் திருகோணமலை மாவட்ட முகாமையாளர் எம்.திருக்குமரன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அருன சிறிசேன ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப்,
நல்லாட்சியை அனைத்து தரப்பினரும் ஏற்றுகொண்டுள்ளார்கள். இவ்வீடமைப்பு திட்டத்தினை இன,அரசியல் பாகுபாடின்றி வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்கள் என்றார்.

4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago