Niroshini / 2015 நவம்பர் 10 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர்
கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களை வலுப்படுத்தும் வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை திருகோணமலை உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.சுதாகரன் தலைமையில் அலுவலகத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை,மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள உள்ளூராட்சி உதவி ஆணையார் அலுவலகங்களில் இந்த உள்ளூராட்சி வள நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சிட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் அனுசரனையுடனும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியுடனும் ஆசியா மன்றம் நடைமுறைப்படுத்தி வரும் உள்ளூர் பொருளாதார ஆட்சி செயற்திட்டத்தின் கீழ் இந்த உள்ளூராட்சி வள நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
இதற்கு முதற்கட்டமாக முப்பது இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சிட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் மேலும் தெரிவித்தார்.
இந்த உள்ளூராட்சி வள நிலையங்கள் அமைக்கப்பட்டப் பின்னர், கிழக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தின் ஆலோசனை வழிகாட்டலில் உள்ளூராட்சி மன்றங்களில் பணிபுரியும் உத்தியோகத்தர்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் பயிற்சிக் கருத்தரங்கு, தொழில்நுட்ப ஆலோசனைகள் என்பன வழங்கப்படவுள்ளன.


40 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago