Niroshini / 2015 நவம்பர் 01 , மு.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்
தேசிய சேமிப்பு வங்கி புகையிலை மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையுடன் இணைந்து நாடு தழுவிய ரீதியில் பொது மக்கள் மாணவர்களுக்கு அறிவூட்டும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.
தேசிய சேமிப்பு வங்கி திருகோணமலை கிளையினர் நேற்று சனிக்கிழமை காலை திருகோணமலை கிளை முகாமையாளர் விஜயரெத்தினம் கோபிநாத் தலைமையில் தபால் திணைக்கள ஊழியர்களுடன் இணைந்து விழிப்புணர்வு ஊர்வலம் மூலம் இவ்விழிப்புணர்வு திட்டத்தை முன்னெடுத்தனர்.
வங்கி கிளையில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இவ்விழிப்புணர்வு ஊர்வலம், கடற்படைத்தள வீதி,நகராட்சி மன்றம், பழைய பொலிஸ் நிலையம், தபால் கந்தோர்வீதி, துறைமுக பொலிஸ் நிலையம், துறைமுக வீதி, ரெலிக்கொம் வீதி, மின்சாரநிலையவீதி வழியாக சென்று பொதுமக்கள் மத்தியில் தெளிவுப்படுத்தினர்.
மேலும், வாகனங்களில் அறிவித்தல்களையும் ஒட்டியதோடு துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தனர்.


2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago