2025 மே 21, புதன்கிழமை

தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கு அரிய சந்தர்ப்பம்

Niroshini   / 2016 மே 20 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் அமைச்சானது திருகோணமலை மாவட்டத்தில் வீட்டுத்திட்டம் உட்பட பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.

இவ்வமைச்சு 2016ஆம் ஆண்டு  திருகோணமலை மாவட்டத்தில் மேற்கொள்ளும் வீட்டுத்திட்டம் உட்பட பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்பார்வை செய்வதற்கு தேசிய தொழிற் சான்றிதழ் குடியியல் பொறியியல் தகைமை பெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர்களை தற்காலிக அடிப்படையில் இணைத்துக்கொள்ளவுள்ளது.

குறித்த தகைமை  மற்றும் கட்டட நிர்மாணத்துறையில் அனுபவம் பெற்றவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பங்களை அனுப்ப முடியும்.

கடித உறையின் இடப்பக்க மேல் மூலையில் பதவியின் பெயரை குறிப்பிட்டு உரிய சான்றிதழ்களின் பிரதிகளை சுயமாக தயாரிக்கப்பட்ட பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பத்துடன் 31.05.2016 ம் திகதிக்கு முன்னர் பதிவுத்தபாலில் மாவட்ட செயலாளர், மாவட்ட செயலகம், திருகோணமலை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .