Niroshini / 2015 நவம்பர் 12 , மு.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
திருகோணமலை கடல்முக வீதியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டு உமைகளும் வீடும் எரிந்து சேதமாகியுள்ள சம்பவம் செவ்வாய்க்கிழமை(10) இடம்பெற்றுள்ளது.
சம்பவதினத்தன்று வீட்டிலுள்ளவர்கள் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கையில் வீட்டின் வழிபாட்டறையிலிருந்து தீப்பற்றிய புகைமண்டலம் வீட்டுக்குள் பரவியது.
இதையடுத்து வீட்டு மின் சுற்றுக்கான இணைப்பைத் துண்டித்து, தீ அணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து தீயணைப்பு படையினர் உடன் வந்து தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்தனர்.
இதன்போது மடிக்கணினிகள்,ஆவணங்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் பல சேதமாகியுள்ளன.
வழிபாட்டறையில் ஏற்றப்பட்டிருந்த விளக்கில் உள்ள திரியினை அணில் எடுத்துச் சென்றதால் இவ்வனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் என்று வீட்டுரிமையாளர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

40 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago