2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

நான்கு கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Freelancer   / 2023 ஒக்டோபர் 04 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ,ஏ.எம்.கீத்

திருகோணமலை மாவட்ட  நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, சந்தைப்படுத்த முடியாத அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்ததால் நான்கு கடை உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

குறித்த சுற்றிவளைப்பு செவ்வாய்க்கிழமை (03) இடம் பெற்றது. இதன் போது மூதூரில் 3 அழகு சாதனப்பொருள் கடையும் கிண்ணியாவில் ஒரு கடையுமாக நான்கு கடை உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பபட்டுள்ளது.

மேலும் திருகோணமலை நகர் பகுதியில் அரிசி விற்பனை விலை காட்சிப்படுத்தாமையினால் குறித்த கடை உரிமையாளர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .