Editorial / 2019 ஒக்டோபர் 03 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.கீத், அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை - துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், 04 கிலோகிராம் டி.என்.டி வெடிமருந்துகளுடன் 61 வயதுடைய நபரொருவரை, இன்று (03) கைது செய்ததாக, திருகோணமலை மாவட்ட பிராந்திய விஷத்தன்மையுடைய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர், திருகோணமலை நகரைச் சேந்தவர் எனவும் இவர் வெடிமருந்து வைத்திருந்த குற்றச்சாட்டில் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டவர் எனவும் பிராந்திய விஷத்தன்மையுடைய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.
குறித்த வெடிமருந்துகளை விற்பனைக்காக வைத்திருந்ததாகத் தெரியவந்துள்ளதுடன், நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக துறைமுகப் பொலிஸாரிடம் சந்தேகநபர் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
16 Mar 2026
16 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Mar 2026
16 Mar 2026