2025 மே 01, வியாழக்கிழமை

நியூசிலாந்து பிரஜை திருமலையில் மரணம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 21 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

நியூசிலாந்து நாட்டில் இருந்து சுற்றுலா பயணம் வந்த வயோதிபர்   திருகோணமலை பொது வைத்தியசாலையில்  இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரிவித்த  பொலிஸார், 89 வயதுடைய அண்ட்ரேவ் டெய்னர்    என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.

 நியூசிலாந்தைச்சேர்ந்த சுற்றுலாப் பயணி தான் உறங்கிக் கொண்டிருந்த கட்டிலில்  இருந்து மயக்கமுற்ற நிலையில்   திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு வந்த வேளை, அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நியூசிலாந்தைச் சேர்ந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்  ட்ட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .