Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஒலுமுதீன் கியாஸ் / 2018 டிசெம்பர் 26 , பி.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூதூர், பிரதேசச் செயலகப் பிரிவுக்குட்பட்ட தக்வா நகர், ஹபீப் நகர் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த, 2014ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், தமக்கு நிரந்தர வீடுகளை அமைத்துத் தருமாறு கோரி, பிரதேச செயலாளரிடம் இன்று (26) மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.
சுனாமி ஏற்பட்டு, நேற்றுடன் 14 வருடங்களாகியும் இன்னும் தமது வாழ்விடங்களுக்காகப் போராடிவரும் மக்களாலேயே, இந்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடந்த 201ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது, பல உயிர்களையும் சொத்துகளையும் இழந்துள்ள போதிலும், 14 வருடங்களாகியும், இதுவரை காலமாக, நிரந்தர வீட்டு வசதியில்லாமலேயே வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக, அரசாங்கத்தால் ஆறு மாதங்களுக்கு வசிப்பபதற்கென அமைத்துத் தரப்பட்ட தற்காலிக கொட்டில்கள்கூட இல்லாதவர்களாக, தற்போது காணிகளோ வீடுகளோ அற்ற நிலையில் உறவினர்கள் வீட்டில் வாழ்ந்து வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு, தங்களுக்குக் காணப்படும் குறைகளை, ஒவ்வொரு ஆண்டும் தெரியப்படுத்தி வருவதாகக் குறிப்பிடப்பிடப்பட்டுள்ள அந்த மகஜரில், இந்த ஆண்டும் அதையே நினைவு படுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்களின் நிலைமையை நேரடியாக அவதானித்து, இது தொடர்பான நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க முன்வருமாறு, அந்த மகஜரில் மேலும் கோரப்பட்டுள்ளது
4 hours ago
17 Aug 2025
17 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
17 Aug 2025
17 Aug 2025