அப்துல்சலாம் யாசீம் / 2020 பெப்ரவரி 03 , பி.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அருகிலுள்ள டைக் பீஸ் பகுதியில் மூன்று இளைஞர்கள் நீராடச் சென்ற போது, ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளாரென, துறைமுகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம், இன்று (03) பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
மேற்படி மூன்று இளைஞர்களும் மரண வீட்டுக்குச் சென்று பின்னர் கடலில் குளிப்பதற்காகச் சென்றுள்ளனர். இதன்போது, ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இதனையடுத்து, பொலிஸ் கடல் பாதுகாப்புப் பிரிவினர் வருகை தந்து தேடுதல் நடத்தி, பின்னர் ஒரு மணி நேரத்துக்குள் சடலத்தை மீட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
இவ்வாறு உயிரிழந்தவர், திருகோணமலை-வைத்தியசாலை விடுதியைச் சேர்ந்த 18 வயதுடைய ஜெரோம் எனவும் தெரியவருகின்றது.
இளைஞனின் சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.


6 hours ago
7 hours ago
24 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
24 Mar 2026