2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

நீர்த் தாவரங்களால் அசௌகரியங்கள்

தீஷான் அஹமட்   / 2019 ஓகஸ்ட் 26 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் அல்லைக்குளத்தில் நீர்த் தாவரங்கள் வளர்ந்து காணப்படுவதால் மீனவர்கள், விவசாயிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகக் கவலை தெரிவிக்கின்றனர்.

அல்லைக் குளத்தில் நீர் தாவரங்கள் நிறைந்து காணப்படுவதால் தோணிகளை செலுத்தி மீன்பிடிப்பது கடினமாக காணப்படுவதாக, இக்குளத்தில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அத்தோடு, நீர் தாவரங்கள் வளர்ந்து காணப்படுவதால் இக்குளத்திலிருந்து வயல் நிலங்களுக்கு நீர் செல்லும் வேகம் குறைவாகக் காணப்படுவதால் போதுமான நீரை வயல் நிலங்களுக்கு செலுத்த முடியாதுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர் .

எனவே, இது விடயத்தில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி, தோப்பூர் அல்லைக்குளத்தில் காணப்படும் நீர் தாவரங்களை அகற்றி புனரமைத்துத்தர நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென, தோப்பூர் பிரதேச  விவசாயிகளும், மீனவர்களும் பொதுமக்களும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X