2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

நெல் விதைப்பு விழா

Editorial   / 2019 ஒக்டோபர் 08 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட், எஸ்.எல்.நௌபர்

"நிலத்தைப் பன்படுத்துவோம், வளம் பெறுவோம்" எனும் தொனிப்பொருளின் கீழ், திருகோணமலை - தோப்பூர் பகுதியில் நெல் விதைப்பு விழா, தோப்பூர் மிலேனியம் விவசாயச் சங்கத் தலைவர் கே.எம்.ஜாபீர் தலைமையில் இன்று  (08) காலை நடைபெற்றது.

உயிர் நீத்த விவசாயிகளுக்கான விசேட துஆ பிரார்த்தனையுடன் நெல் விதைப்பு விழா ஆரம்பமானது.

இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக திருகோணமலை கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் எஸ்.புனிதகுமார் கலந்துகொண்டார்.

ஏனைய அதிதிகளாக தோப்பூர் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.நௌபர், விவசாயப் போதனாசிரியர்களான ஏ.எம்.எம்.மன்சூர், யு.மினாகிர், தோப்பூர் உப பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.நிதவுஸ் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .