2025 ஜூலை 23, புதன்கிழமை

நெய்தல் நகர் மக்கள் ஆர்ப்பாட்டம்

Thipaan   / 2016 டிசெம்பர் 28 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார்

திருகோணமலை, மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நெய்தல் நகர் கிராமத்தில், தமக்காக ஒதுக்கப்பட்ட 800 மீற்றர் வீதியை அமைப்பதில் அரசியல் தலையீடு காணப்படுவதுடன், அவ்வீதியின் அளவு குறைக்கப்பட்டதையும் கண்டித்து கிராம மக்கள், இன்று புதன்கிழமை (28) கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

'நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபிக்கின் நிதி உதவியில், அல் ஸிலால் மத்திய கல்லூரியில் இருந்து பழைய இறங்குதுறை வரையான 800 மீற்றர் வீதியை கார்பெட் வீதியாக அமைத்துத் தருவதற்கான தொகையினை ஒதுக்கியுள்ளோம் எனத் தெரிவித்து, அதற்கான நிர்மாணப் பொருட்களும் இறக்கப்பட்டு 2 மாத காலம் ஆகிவிட்டது.

இருந்த போதும், அதில் 520 மீற்றர் மாத்திரமே தற்போது அமைக்கப்படும் என, ஒப்பந்காரர் தெரிவிக்கிறார.; காரணம், மிகுதியுள்ள 280 மீற்றரை இங்குள்ள உள்ளூர் அரசியல்வாதிகள் தமது வீட்டுக்கு செல்லகின்ற ஒழுங்கைகளை புனரமைக்க முயன்று வருகின்றனர்' என, இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட யூசுப் ரசூல் என்பவர் தெரிவித்தார்.

எனவே, இவ்விடயம் தொடர்பாக அரசியல்வாதிகள் பலருக்கும் அரச அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்திய போதும் எவரும் கருத்திற்கொள்ளவில்லை. இப்பிரச்சினைக்கான தீர்வு கிட்டும் வரை, தாம் போராட்டத்தில் ஈடுபடுவோம் என வீதியின் பயனாளிகளான ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .