2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

நிரந்தர நியமனம் வேண்டும்

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 28 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம், பொன் ஆனந்தம்  

கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் கடமை நிறைவேற்று அதிபர்களாக கடமையாற்றி வருகின்ற தங்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குமாறு கோரி திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சுக்கு முன்பாக திங்கட்கிழமை குறித்த அதிபர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   

கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர்; கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தபோது,'கடந்த 30 வருடகாலமாக நிலவிய யுத்த சூழ்நிலைக் காலத்தில்; பாடசாலைகளில் அதிபர்களுக்கான வெற்றிடங்கள் ஏற்பட்டபோது, அப்பாடசாலைகளில் கடமையாற்றிய சிரேஷ்;ட ஆசிரியர்கள் கடமை நிறைவேற்று அதிபர்களாக நியமிக்கப்பட்டனர். இவ்வாறு அதிபர்களாக நியமிக்கப்பட்ட நாங்கள் பாடசாலைச் சமூகங்களுடன் இணைந்து பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம்;.  

கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக நாங்கள் நிரந்தர நியமனங்களின்றி உள்ளோம். எனவே, எங்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம்' என்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X