2025 மே 23, வெள்ளிக்கிழமை

நிலை மாறு கால நீதி தொடர்பான செயலமர்வு

Niroshini   / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத், பதுர்தீன் சியானா

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் விழுது - ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் அனுசரணையுடன் ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்களுக்கான நிலை மாறு கால நீதி தொடர்பான செயலமர்வொன்று எதிர்வரும் 16ஆம் திகதி சனிக்கிழமை மட்டக்களப்பு கல்லடியிலுள்ள விழுது - ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் காரியாலயத்தில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை நடைபெறவுள்ளது.

நிலை மாறு கால நீதி தொடர்பான தெளிவூட்டல்கள் சமூக மட்டத்திலும் ஊடகவியலாளர்கள் மத்தியிலும் இன்றைய கால கட்டத்தில் முக்கிய தேவையாக உள்ளது.

இச் செயலமர்வின் பயிற்சியாளராக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் அம்பிகா கலந்து கொள்ளவுள்ளார்.

இலங்கையைப் பொறுத்தவரை நிலைமாறுகால நீதியை அடைவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலத்தில் நாம் இப்போது இருக்கிறோம். இதற்கான சகல விதமான ஆதரவுகளையும் ஊடகவியலாளர்கள் வழங்க வேண்டும்.

நிலைமாறு கால நீதிக்கான செயற்பாட்டில் நம்பிக்கையினை மீள கட்டியெழுப்பல், உண்மையை வெளிப்படுத்தல்,  குற்றஞ்சாட்டப்பட்டவர்களை பொறுப்புகூற வைத்தல், பாதிக்கப்பட்டவர்களை அங்கீகரித்தல்,  நிலையான சமாதானமான சமூகத்தை கட்டியெழுப்பல் என்பவை முக்கிய பகுதிகளாக இருக்கின்றன.

அத்துடன், நிலைமாறு கால நீதிக்கான தூண்களாக விளங்கும் உண்மையை அறிந்து கொள்ளும் உரிமை, நிறுவன ரீதியிலான சீர்திருத்தம், குற்ற வழக்கு தொடர்தலுடன் சம்பந்தப்பட்ட நீதியைக் கண்டறியும் உரிமை, இழப்பீடு வழங்குதல் என்பவற்றுக்கான தேவையும் உள்ளது.

இந்தச் செயலமர்வில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் 077-2772601 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டோ அல்லது  குறுஞ்செய்தியினை அனுப்பியோ தங்களது வருகையினை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X