2025 மே 23, வெள்ளிக்கிழமை

நுளம்புகள் பெருகும் வகையில் வீட்டுச் சூழல்; 17 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                  

திருகோணமலை, கந்தளாய் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நுளம்புகள் பெருகும் வகையில் வீட்டுச் சூழலை  வைத்திருந்ததாகக் கூறப்படும் 17 பேருக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக  அப்பிரிவு பொதுச் சுகாதாரப் பரிசோதகர் கபில திலகரத்தின தெரிவித்தார்.                                      

கடந்த 29ஆம் திகதியிலிருந்து ஏப்ரல் மாதம் நான்காம் திகதி வரை தேசிய டெங்கொழிப்பு வாரத்தை முன்னிட்டு கந்தளாய் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

பேராறு, மூன்றாம் கொலனி, ரஜஎல, வாத்தியாகம உள்ளிட்ட பகுதிகளிலேயே நுளம்புகள் பெருகும் வீட்டுச் சூழலை  வைத்திருந்தோர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X