Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Thipaan / 2016 ஜூன் 09 , மு.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா
திருகோணமலை மொறவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 04ஆம் கண்டம் பகுதியில், காட்டு யானைகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் மின் வேலி அமைத்துத் தருவதாகக் கூறி பணம் சேகரித்து மின் வேலி அமைத்துத் தரப்படவில்லையெனவும் அப்பகுதியிலுள்ள மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர், காட்டு யானைகளின் தொல்லைகளை தடுப்பதற்காக கிராமத்தில் குழுவொன்றினை அமைத்து மின் வேலிகளை அமைப்பதற்காக அக்குழுவின் ஊடாக பணத்தை சேகரித்து வந்ததாகவும் இதுவரைக்கும் மின் வேலி அமைக்கவில்லையெனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
பகலில் விவசாயத்தினை மேற்கொண்டு, இரவில் நிம்மதியாக நித்திரை கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் வீட்டுத்தோட்டப் பயிர்களை யானைகள் சேதப்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, பல அரசியல்வாதிகளிடம் மின் வேலிகள் தொடர்பாக தெரியப்படுத்தியும் எதுவித நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் காட்டு யானைகளின் தொல்லையினால் 04ஆம் கண்டத்தை விட்டுச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதியிலுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது விடயமாக மொறவௌ பிரதேச செயலாளர் வாத்திய விஜயந்தவிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டபோது, யானைகளின் தொல்லையென இணங்காணப்பட்ட இடங்களை தெரிவு செய்து அப்பகுதிக்கு மின் வேலி அமைக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
9 hours ago