2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

படகை ஒப்படைக்க உத்தரவு

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.புகாரி

சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூர் பிரதேச கடல் எல்லையில் கடந்த நவம்பர் மாதம் 14ஆம் திகதி கரையொதுங்கிய படகு, இந்திய மீனவருடையது எனத் தெரியவந்ததையடுத்து, அதை திருகோணமலை கரையோர கடற்படையினரிடம் ஒப்படைத்து, அவர்கள் மூலமாக இந்திய கரையோர கடற்படையினரிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மூதூர் நீதிவான் ஜ.றிஸ்வான், சம்பூர் பொலிஸாருக்கு செவ்வாய்கிழமை (15) உத்தரவு பிறப்பித்தார்.

கரையொதுங்கிய குறித்த படகில் காணப்பட்ட ஆதாரங்களை வைத்து சம்பூர் பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டபோது இது இந்திய மீனவர்களின் படகு எனத் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து ஏ அறிக்கையின் மூலம் மூதூர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்த நிலையில் மூதூர் நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .