2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

பட்டணமும் சூழலுக்கும் ஒரு மில்லியன் நிவாரணம்

Princiya Dixci   / 2021 மே 05 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட், அ.அச்சுதன்

ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான  உலர் உணவுப் பொருட்களைக்  கனடா - திருகோணமலை நலன்புரிச் சங்கக் காப்பாளரும் திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவருமான  ச.குகதாசன், திருகோணமலை மாவட்டச் செயலகத்தில்  வைத்து மேலதிக அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜிடம் இன்று (05) கையளித்தார்.

பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில்முடக்கப்பட்டுள்ள 9 கிராம சேவையாளர் பிரிவுகளில், பூம்புகார் கிழக்கு, பூம்புகார், பாலையூற்று மற்றும் லிங்கநகர்  பகுதிகளைச் சேர்ந்த, நாளாந்தச் சம்பளத்துக்கு வேலை செய்யும் மக்களுக்கு இவை வழங்கப்படவுள்ளன.

சுகாதாரத் துறையின் புள்ளிவிவரங்களின் படி இம்மாதம் 02ஆம் திகதி வரை  திருகோணமலை மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 1,517 கொரோனாத்  தொற்றாளர்களில் 1,023 பேர் திருகோணமலைப் பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X