2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கி வைப்பு

Editorial   / 2019 ஜனவரி 30 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், ஏ.ஆர்.எம்.றிபாஸ், ஹஸ்பர் ஏ ஹலீம், எப்.முபாரக், தீஷான் அஹமட், ஏ.எம்.ஏ.பரீத், வடிவேல் சக்திவேல் 

பட்டதாரி ஆசிரியர் நிரந்தர நியமனங்களை, ஆளுநர் செயலகத்தில் வைத்து, கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், இன்று (30) வழங்கி வைத்தார்.

சமீபத்தில் இடம்பெற்ற நேர்முகப்பரீட்சைக்குத் தோற்றிய நிலையிலும் நியமனம் வழங்கப்படாதிருந்த பட்டதாரிகளுக்கே, இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஆளுநரின் விசேட பணிப்புரைக்கு அமைய மீண்டும் தகுதி அடிப்படையில், சுமார் 19 பட்டதாரிகளுக்கு ஆசிரியர்  நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த 19 நியமனத்தில் 18 தமிழ் மொழிப் பட்டதாரிகளும் ஒரு சிங்கள மொழிப் பட்டதாரியும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

குறித்த பட்டதாரிகள், அவரவர் வதியும் மாவட்டத்திலேயே கடமைக்காக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X