Niroshini / 2015 செப்டெம்பர் 22 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
திருகோணமலை பிரதேசத்தில் பணமோசடி,காசோலையில் மோசடி செய்தமைமற்றும் வாகனங்கள் விற்பனையின் போது பணம் செலுத்தாமை போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் தேடப்பட்டு வந்த சந்தேக நபரொருவரை திருகோணமலை நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறித்த நபர் தொடர்பில் பல முறைபாடுகள் கிடைக்கப்பெற்றதையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் தலைமறைவாகியிருந்த நிலையில் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் ஒருவரிடம் வாங்கிய இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டு ஏமாற்றியுள்ளதாகவும் வாகனங்கள் விற்பனையின் போது பணம் செலுத்தாது மோசடி செய்துள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026