Niroshini / 2016 பெப்ரவரி 10 , மு.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
மூன்று இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்து விட்டு தலைமறைவாக இருந்த பெண்ணொருவரை இம்மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் செவ்வாய்கிழமை (09)உத்தரவிட்டார்.
மூதூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே மூன்று இலட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டு தலைமறைவாக திருகோணமலை பகுதியில் இருந்த நிலையில் திருகோணமலை குற்றத்தடுப்பு பொலிஸாரினால் திங்கட்கிழமை (08)கைது செய்யப்பட்டார்.
குறித்த சந்தேக நபர் பொதுமக்களிடம் சீட்டுப்பிடித்து சீட்டு பணத்தை வழங்காது மோசடி செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை பொலிஸார் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
சம்பவம் பற்றிய விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago