Editorial / 2019 மே 03 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், பத்து வாள்களை வைத்திருந்த நபர் ஒருவரை, இம்மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க நேற்று (2)உத்தரவிட்டுள்ளார்.
மகாமாறு,கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கிண்ணியா பிரதேசத்தில் பொலிஸாரும்,இராணுவத்தினரும் மேற்கொண்டசோதனை நடவடிக்கையின் போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த பத்து வாள்களுடன் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேகநபரை, திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .