Niroshini / 2017 மார்ச் 25 , மு.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலையிலிருந்து அநுராதபுரம் நோக்கி சென்ற இ.போ.ச பஸ்ஸில் பயணித்த பயணிகள் இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாக்கு வாதத்தினால் கோபம் கொண்ட பயணியொருவர் மற்றைய பயணியை போலி பிஸ்டல் துப்பாக்கியையும் கத்தியையும் காட்டி பயமுறுத்திய கடந்படை வீரரை, நேற்று மாலை கைது செய்துள்ளதாக மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து, போலியான பிஸ்டல் மற்றும் தெலிப்பி எனும் கத்தி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
திருகோணமலை கடற்படை முகாமில் எஸ்.பீ.எஸ் பிரிவில் கடமையாற்றிவரும் சிலாபம் - கரவிடாகாரய பகுதியைச் சேர்ந்த கே.ஏ.என்.என்.கருணாரத்ன (36 வயது) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பஸ்ஸில் பயணித்த இருவரும் ஒரே கடற்படை முகாமில் வெவ்வேறு பிரிவுகளில் கடமையாற்றுபவர்கள் எனவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த நபரை திருகோணமலை நீதிமன்றில் இன்று சனிக்கிழமை ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
2 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
9 hours ago