Kogilavani / 2016 நவம்பர் 25 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்
2016 உள்ளூராட்சி மாதம் மற்றும் தேசிய வாசிப்பு மாதங்களையொட்டி, மூதூர் பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசு வழங்கும் நிகழ்வும் கலைஞர்கள், கல்விமான்கள் கௌரவிப்பும், நேற்று (24) வியாழக்கிழமை, மூதூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றதது.
மூதூர் பிரதேச சபையின் செயலாளர் ஜமால்தீன் நஜாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், “சேவகம்” எனும் நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதீதியாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஜே.எம்.லாஹீர், கே.நாகேஸ்வரன், ஆர்.எம்.அன்வர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அத்தோடு சிறப்பு அதிதிகளாக, கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், கிழக்கு மாகாண பேரவைச் செயலாளர் எம்.சீ.எம்.ஷெரீப், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.சுதாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.



9 minute ago
27 minute ago
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
27 minute ago
45 minute ago
2 hours ago