2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

பற்றுச்சீட்டு வழங்காமையால் சந்தேகம்

Editorial   / 2018 நவம்பர் 15 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளியே காணப்படும் மோட்டார் சைக்கிள் தரிப்பிடங்களுக்கான கட்டணமாக 10 ரூபாய் அறவிடப்படுகிற போதிலும் அதற்கான பற்றுச்சீட்டு வழங்கப்படாமை குறித்து, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

குறித்த 10 ரூபாயை, வைத்தியசாலையின் நுழைவாயிலுக்கு அருகாமையில் பழக் கடை வைத்திருக்கும் ஒருவரே அறவிடுவதாகவும் திருகோணமலை நகராட்சி மன்றத்தால் தானே பொறுப்பெடுத்து செய்வதாகவும் பழக்கடை உரிமையாளர் கூறிவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, இவ்விடயம் தொடர்பில், உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி, தரிப்பிடத்துக்கான பொறுப்பு வாய்ந்தவரை நியமித்து, சட்டரீதியான நடைமுறையுடன், உரிய பணத்துக்கான பற்றுச்சீட்டையும் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X