Editorial / 2019 பெப்ரவரி 18 , பி.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.எல். நௌபர்
கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கீழுள்ள தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில், நிரந்தர பல் வைத்தியர் ஒருவர் இல்லையென, அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டனர்.
இங்குள்ள 14 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த 21,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள், இவ்வைத்தியசாலையை நம்பி சிகிச்சைபெறுகின்றனர்.
இங்கு நிரந்தர பல் வைத்தியர் ஒருவர் நியமிக்கப்படாமையால், பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் கிளிவெட்டி வைத்தியசாலையின் இருந்து பல் வைத்தியர் ஒருவரே பதிலீட்டு அடிப்படையில் இங்கு வந்து கடமை புரிகின்றார்.
இதனால் இங்குள்ள மக்கள், பற்சிகிச்சை பெறுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகக் கூறுகின்றனர். ஏனைய தினங்களில் சிகிச்சை பெறுவதாயின், மூதூர் வைத்தியசாலைக்குச் செல்லவேண்டியுள்ளது.
எனவே, தோப்பூர் பிரதேச வைத்தியசாலைக்கு நிரந்தர பல் வைத்தியர் ஒருவரை நியமித்துதருமாறு, பொதுமக்கள், அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
15 minute ago
4 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
4 hours ago
7 hours ago
8 hours ago