Niroshini / 2016 மே 09 , மு.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர்
'பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பப் படிவங்களை சரியாகப் பூர்த்தி செய்யாதவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். இந்த நிலை எந்த மாணவருக்கும் ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் இந்த விழிப்பூட்டல் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை பயனுள்ளதாக்கிக் கொள்வது இங்கு வந்திருக்கின்ற மாணவர்களின் பொறுப்பாகும்" என கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் ஜெ.லியாக்கத் அலி தெரிவித்தார்.
2015ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிப்பதற்குத் தகுதி பெற்ற தமிழ்,முஸ்லிம் மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக விழிப்பூட்டும் விஷேட செயலமர்வு சனிக்கிழமை (07)மருதமுனை பொது நூலக சமூக வள நிலையத்தில் நடைபெற்றது இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்துவைத்து உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றகையில் தெரிவித்ததாவது,
பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பது என்பது கடந்த காலங்களைப் போல் அல்லாது இப்போது வித்தியாசமான முறையில் விண்ணப்பப் படிவங்களை பூரணப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் மிகவும் விழிப்பாகவும் கவனமாகவும் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய் வேண்டியது மிகவும் அவசியமாகும்.
பல்கலைக்கழக அனுமதி என்பது வாழ்க்கையில் ஒருவருக்கு கிடைக்கின்ற அரிய சந்தர்ப்பமாகும். இந்த அரிய சந்தர்ப்பத்தை இழப்பது மிகவும் துரதிஷ்டமாகும். ஆகவே, மாணவர்களாகிய நீங்கள் இந்தக் கருத்தரங்கை பயனுள்ளதாக்கிக் கொள்ள வேண்டும் என்றார்.


15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025