Niroshini / 2015 ஒக்டோபர் 20 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
திருகோணமலை பிரதேசத்தில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் எட்டுப் பேரை இன்று செவ்வாய்க்கிழமை(20) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உப்புவெளி மற்றும் திருகோணமலை பிரதேசங்களில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் திருடியமை மற்றும் கடைகளை உடைத்து இலத்திரனியல் பொருட்களை திருடியமை போன்ற குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் எட்டுப் பேரையும் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேக நபர்கள் திருடிய பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
4 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago