Editorial / 2019 செப்டெம்பர் 24 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்
திருகோணமலை - அக்போபுர பொலிஸ் பிரிவுக்குபட்ட பகுதியில், பஸ்ஸொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில், 18 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனரென, அக்போபுர பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து, அக்போபுர, கித்துள் ஊற்றுப் பகுதியில் நேற்றிரவு (23) இடம்பெற்றுள்ளாதாப் பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தளாயில் இருந்து நாவலப்பிட்டிப் பகுதிக்கு உறவினர்கள் சகிதம் மரண வீடு ஒன்றுக்குச் சென்று திரும்புகையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் இதில் சிறுவர்கள் மூவர், பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனரெனவும் அக்போபுர பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தளாய் பகுதியில் பெய்துவருகின்ற பலத்த மழையும், பஸ்ஸின் வேகமுமே விபத்துக்கு காரணமெனப் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை, அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

43 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
51 minute ago