Niroshini / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.புகாரி
மூதூரிலிருந்து கொழும்புக்கு செல்லும் மூதூர் சாலைக்குச் சொந்தமான பஸ்ஸை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சேருநுவர மதுபானசாலை உரிமையாளரையும் அவரது சகாக்கள் இருவரையும் இன்று திங்கட்கிழமை மூதூர் நீதிவான் நீன்ற நீதிவான் ஐ.எம்.றிஸ்வான் புதன்கிழமை(16) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சேருநுவர மதுபானசாலைக்கு முன்னால் வைத்து கல் தாக்குதலுக்கு இலக்காகி குறித்த பஸ்ஸின் முன் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறப்படும் சேருநுவர மதுபானசாலை உரிமையாளருக்கு கொழும்புக்குச் செல்கின்ற றூட் பஸ் வண்டி ஒன்று காணப்படுகின்றது.
இதனால்,பயணிகளை ஏற்றி இறக்குவதில் மூதூர் சாலை சாரதிகளுக்கும் இவரது பஸ் சாரிகளுக்கும் இருந்து வந்த கருத்து முரண்பாடே இத் தாக்குதலுக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
11 minute ago
20 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
20 minute ago
30 minute ago