2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

பாடசாலைகளில் சேதனப் பசளை மூலமான தோட்டங்கள்

Princiya Dixci   / 2021 ஜூன் 30 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீட்

பாடசாலைகள் ஆரம்பித்தவுடன் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் சேதனப் பசளை மூலமான மாதிரி தோட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று (30)  நடைபெற்ற  கூட்டத்தின் போதே, அவர் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்


இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ எடுத்த முடிவை உண்மையாக்குவதற்கு இது செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் ஆளுநர் கூறியுள்ளார்.

 

இந்த புதிய விடயத்தை மாணவர்களின் இதயங்களில் அறிமுகப்படுத்துவதன் மூலம், நாட்டின் எதிர்கால தலைமுறை நிச்சயமாக நிலையான விவசாயத்தை நோக்கி நகரும் என்று அவர் மேலும் கூறியுள்ளார். 

 

இது குறித்து அனைத்து அதிபர்களுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் சேதனப் பசளை  செய்கை விவசாயம்  தொடர்பில் மாணவர்களுக்கு கற்பிக்க பாடசாலை பாடத்திட்டத்தில் வாரத்துக்கு ஒரு நேரமாவது சேர்க்கப்பட வேண்டும் என்றும் ஆளுநர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X