Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
தீஷான் அஹமட் / 2017 நவம்பர் 22 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
தோப்பூர், தாயிப் நகர் கிராமத்தில் வீட்டுத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தோப்பூர் செல்வநகர் பகுதியைச் சேர்ந்த ஏ.எல்.பாஜீர் (55) எனும் குடும்பஸ்தர், பாம்புக் கடிக்கு இலக்கி, தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக மூதூர் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளாரென, வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நபர் வழமை போன்று, நேற்று (21) மாலை தனது வீட்டுத் தோட்டத்திலுள்ள புற்களைக் கொத்தி துப்பரவு செய்து கொண்டிருக்கும் போது, பற்றைக்குள் மறைந்திருந்த பாம்பொன்று, இவரது கால் பகுதியைத் தீண்டியதையடுத்து, அவர் சத்தமிட்டுள்ளார்.
இதனையடுத்து, அயல் வீட்டுக்காரர்களின் உதவியுடன் பாம்புக்கடிக்கு இலக்கானவர், வைத்தியசாலைக்குக் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
17 minute ago
24 minute ago
33 minute ago