2025 மே 02, வெள்ளிக்கிழமை

பார்வையாளர் அரங்குக்கு அடிக்கல் நாட்டிவைப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 18 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன், ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை, தம்பலகாம பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை ஹமீதியா விளையாட்டு மைதானத்தின் பார்வையாளர் அரங்குக்கான கட்டட  நிர்மாணத்துக்கான  அடிக்கல் நடும் வைபவம், நேற்று (17) இடம்பெற்றது.

குறித்த பார்வையாளர் அரங்கு, சுமார் 20 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிப்பதற்காக, அப்பிரதேச ஏழு விளையாட்டுக் கழகங்கள் இணைந்து விடுத்த வேண்டுகோளுக்கிணங்க,  துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூபினால் அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதியமைச்சரின் இணைப்பாளர் ஈ.எல்.அனீஸ், தம்பலகாம பிரதேச சபை உறுப்பினர்களான தாலிப் அலி ஹாஜியார், ஆர்.எம்.றஜீன், தன்சூல் அலீம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .