Editorial / 2018 மார்ச் 27 , பி.ப. 02:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத், ஹஸ்பர் ஏ ஹலீம், அப்துல்சலாம் யாசீம், ஒலுமுதீன் கியாஸ்
திருகோணமலை பிராந்திய, போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், அனுமதிப்பத்திரமின்றி அதிகளவான பியர் போத்தல்களைத் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் நபரொருவரை, நேற்று (26) கைது செய்து, சீனக்குடா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
பொலன்னறுவை ஜயந்திபுர – தபலவெவ பகுதியைச் சேர்ந்த டி.கே. பிரதீப் சதுரங்க சமரவிக்ரம (வயது 29) என்பவரே, கைதுசெய்யப்பட்டுள்ளார்.
500 மில்லிலீட்டர் அடங்கிய 12 பியர் போத்தல்களும் 625 மில்லிலீட்டர் அடங்கிய 12 பியர் போத்தல்களும் சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த நபர், மோட்டார் சைக்கிளில் சங்கமம் பகுதியிலிருந்து அலிஒழுவ பகுதிக்கு விற்பனைக்காக பியர் போத்தல்களைக் கொண்டுச் செல்லும் போது, கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சோதனையிட்டப்போதே கைது செய்யப்பட்டாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபரை, திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதாக சீனக்குடாப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
9 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
2 hours ago
2 hours ago