Editorial / 2023 மே 14 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹித்துல் ஊற்று பகுதியில் புகையிரதத்தில் காட்டு யானைகள் மோதுண்டதில் இரண்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வன ஜீவராசி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இவ் விபத்துச் சம்பவம் சனிக்கிழமை (13) இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து திருகோணமலையை நோக்கிச் சென்ற இரவு நேர அஞ்சல் புகையிரதத்தில் காட்டு யானைகள் மோதியதில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இதன் போது யானைகள் காட்டு யானைகள் இறந்துள்ளதோடு மற்றொரு காட்டு யானை காயங்களுடன் காட்டுக்குள் புகுந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். யானைகள் மோதியல் இரண்டு மணித்தியாலங்கள் புகையிரதம் செல்லுவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வன ஜீவராசி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

31 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
7 hours ago