2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

புதிய உறுப்பினரின் முன்மாதிரி நடவடிக்கை

Editorial   / 2019 செப்டெம்பர் 24 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், ஏ.ஆர்.எம்.றிபாஸ்

கிண்ணியா நகர சபை உறுப்பினராக புதிதாகக் கடமையேற்றுள்ள உறுப்பினர்  உமர் அலி ரணிஸ், தனக்குக் கிடைத்த முதலாவது சம்பளத்தைப் பொதுமக்கள் ஐவருக்குப் பகிர்ந்தளிந்து ஒரு முன்மாதிரியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

இவரின் தேர்தல் வாக்குறுதிகளில் மிக முக்கியமானவைகளுள் ஒன்றாக நகர சபை மூலம் கிடைக்கும் சம்பளம், அத்தனைச் சலுகைளையும் தமது வட்டாரத்தில் இனங்காணப்பட்ட நிரந்தர நோயாளர்கள், அடிமட்ட ஏழைகள், விதவைகள், நோயுற்ற கணவனையும் பிள்ளைகளையும் தலைமை தாங்கும் பெண்கள், கவனிப்பாரற்றுத் தனிமையில் வாழும் முதியவர்கள், ஊனமுற்றோர் ஆகியோர்களுக்கு வழங்குவதாக வாக்குறுதியளித்திருந்தார்.

அதனடிப்படையில், எக்தார் நகர், பெரியாற்றுமுனை, பெரிய கிண்ணியா ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய பெரியாற்று முனை வட்டாரத்தில்  ஐவர் இனங்காணப்பட்டு வழங்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .