2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பெண்கள் இருவர் உட்பட நால்வருக்கு விளக்கமறியல்

அப்துல்சலாம் யாசீம்   / 2019 பெப்ரவரி 11 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த பெண்கள் இருவர் உட்பட நால்வரை, எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு,  திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா, இன்று (11) உத்தரவிட்டார்.

திருகோணமலை - ஹொரவப்பொத்தானை பிரதான வீதி, வில்கம் பகுதியில், விடுதியொன்றில் இரகசியமாக பாலியல் தொழில் நடத்தப்பட்டு வருவதாக உப்புவெளிப் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவைப் பெற்ற உப்புவெளிப் பொலிஸார், சந்தேகத்துக்கு இடமான விடுதியைச் சோதனையிட்ட போது, அங்கிருந்த   பெண்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது,  இவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்ததாக, உப்புவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, பாலியல் தொழிலுக்காக இரகசியமாக மேற்படி விடுதியை நடத்தி வந்த வீட்டு உரிமையாளரையும் இத்தொழிலுக்காக உதவிய ஓட்டோ சாரதியையும் கைது செய்ததாகவும் உப்புவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் திருகோணமலை – அன்புவளிபுரம், அநுராதபுரம் பகுதிகளைச் சேர்ந்த 27 - 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X