எப். முபாரக் / 2017 டிசெம்பர் 16 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பெண்ணொருவரின் வீட்டினுள் அத்துமீறி உள் நுழைந்த இளைஞர் ஒருவரை நேற்று(15) பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திருகோணமலை, ஐந்தாம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த சந்தேகநபர், தனிமையில் இருந்த பெண்ணொருவரின் வீட்டுக்குள் புகுந்தப்போது, அப்பெண் கூச்சலிட்டுள்ளார் இதன்போது சத்தம் கேட்டு அவ்விடத்திற்கு விரைந்த அயலவர்கள், சந்தேகநபரை சுற்றிவளைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர் திருடுவதற்கு சென்றாரா? அல்லது குறித்த பெண்ணின் வீட்டுக்கு வேறு தேவைகளுக்காக சென்றாரா? என்றக்கோணத்தில் சந்தேகநபரை தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
1 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago