Editorial / 2018 மார்ச் 21 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம், ஒலுமுதீன் கியாஸ்
கிண்ணியா, மணல்ஆறு பிரதேசத்தில், பொலிஸாரின் சுற்றிவளைப்புக்கு அஞ்சி, மஹாவலி ஆற்றில் பாய்ந்த இளைஞன், இன்று (21) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிண்ணியா, பைசல் நகரைச் சேர்ந்த 17 வயதுடைய ரனீஸ் எனும் இளைஞனே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளாரெனத் தெரியவருகிறது.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
மஹாவலி ஆற்றில் நேற்று (20) சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட நபர்களைப் பொலிஸார் சுற்றிவளைக்க முற்பட்ட வேளையில், தப்பிச்செல்ல முயன்ற ஐந்து நபர்களில் ஒருவர், நீரில் மூழ்கிக் காணாமல் போயிருந்தார்.
இவ்வாறு நீரில் மூழ்கிக் காணாமல் போன இளைஞனே, கடற்படையினரின் உதவியுடன், இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட ஏனைய 4 நபர்களிடமிருந்து, மணல் அகழ்வு தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

10 minute ago
21 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
21 minute ago
38 minute ago