2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு

Editorial   / 2019 செப்டெம்பர் 20 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை கருமலையூற்று, வெள்ளைமணல் எனும் முகவரியை வசிப்பிடமாகக் கொண்ட ஜௌபர் சாதிக் மொஹமட் ஜௌஸ், உதவி பொலிஸ் பரிசோதகராக (SI) கடமையாற்றி வந்த நிலையில் பொலிஸ் பரிசோதகராக (IP) பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இதனை இலங்கை பொலிஸ் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அவருக்கு அறிவித்துள்ளது.

குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவின் புடவைக்கட்டு பகுதியைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர் தற்போது துறைமுகங்கள், கப்பற்றுறை பிரதியமைச்சரின் பாதுகாப்புப் பிரிவின் பிரதம அதிகாரியாகவும் செயற்பட்டு வருகிறார்.

அவர் அமைச்சர் பாதுகாப்புப் பிரிவின் விசேட பயிற்சியையும் பூர்த்தி செய்தவராவார். தனது ஆரம்ப கல்வியை கொழும்பு அல்நஸார் மகாவித்தியாலயம், கொட்டாஞ்சேனை விவேகானந்தா கல்லூரியிலும் உயர் கல்வியை கிண்ணியா மத்திய கல்லூரியில் கற்றுள்ளார்.

மேலும் திரியாய் கள்ளம்பத்தை பாடசாலையில் இரு வருடங்களாக ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X