2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

போதை மாத்திரைகளுடன் ஐவர் கைது

Editorial   / 2019 ஏப்ரல் 21 , பி.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல் சலாம் யாசீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ்

திருகோணமலை, புல்மோட்டை 14ஆம் கட்டைப் பகுதியில், போதை மாத்திரைகளுடன் ஐவரை, புல்மோட்டை பொலிஸார், இன்று (21) கைதுசெய்துள்ளனர்.

புல்மோட்டை பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தவகலயைடுத்து, ஓட்டோ ஒன்றைச் சோதனையிட்ட பொலிஸார், மூவரை கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து போதை மாத்திரைகளையும் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, மேற்படி இளைஞர்கள் வழங்கியத் தகவலுக்கு அமைவாக, வான் ஒன்றில் வந்த தந்தை, மகன் ஆகிய இருவரை விசாரணைக்கு உட்படுத்திய பொலிஸார், அவர்களை கைதுசெய்துள்ளதுடன், ஒருதொகை போதை மாத்திரைகளையும் கைப்பற்றியுள்ளனர்.

வத்தளை -பலகல வீதி, ஹெந்தலயைச் சேர்ந்த 64 வயதுடைய தந்தையும் 28 மகனும் மற்றும் புல்மோட்டை-தக்வா நகர், சலாமியா நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 27, 28, 30 வயதுடைய இளைஞர்களே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, 3,360 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டப்பட்டன எனத் தெரிவித்த பொலிஸார், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .