Editorial / 2019 ஜூலை 11 , பி.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை-புல்மோட்டை பகுதியில் போதை மாத்திரைகளுடன் கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் நான்கு பேரையும் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க முன்னிலையில் நேற்றுமுன்தினம் (10) குச்சவெளி சுற்றுலா நீதிமன்றில் சந்தேக நபர்களை ஆஜர்படுத்திய போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலையிலிருந்து - புல்மோட்டை நோக்கி முச்சக்கர வண்டியில் யான் ஓயா பாலத்துக்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்தவர்களை பொலிஸார் சோதனை நடத்தியபோது , தம்வசம் 150 போதை மாத்திரைகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.இதேவேளை, இச் சந்தேக நபர்கள் தொடர்பில் வேறு பொலிஸ் நிலையங்களில் முன் குற்றங்கள் பதியப்பட்டுள்ளதா என்பது பற்றிய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago