2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

போலி நாயணத்தாள்களுடன் ஒருவர் கைது

அப்துல்சலாம் யாசீம்   / 2019 ஜனவரி 31 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை, ரொட்டவெவ பகுதியில், போலி நாயணத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில், 52 வயதுடைய நபரொருவர், நேற்று (30) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளாரென, மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

மொரவெவ பொலிஸ் நிலையத்துக்கு வழங்கப்பட்ட இரகசியத் தகவலையடுத்து, அப்பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.எம்.பீ. குலதுங்க, குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ். பீ. விமல் ஆகியோர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளின் தலைமையில், சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரின் இடுப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ள போலி நாயணத்தாள்களின் பெறுமதி, ஒரு இலட்சத்தி 75,000 ரூபாயென, பொலிஸார் தெரிவித்தனர்.

இவற்றில், 5,000 ரூபாய் தாள்கள் 16உம் 1,000 ரூபாய் தாள்கள் 95உம் அடங்குவதாகத் தெரிவித்த மொரவெவ பொலிஸார், சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ​தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X