2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

பாடசாலையை திறக்குமாறு கோரிக்கை

Thipaan   / 2017 பெப்ரவரி 02 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலைக்கு வடக்கே 73 கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள எல்லைக் கிராமமான தென்னமரவாடி  கிராமத்திலுள்ள பாடசாலையைத் திறக்குமாறு, அப்பகுதியிலுள்ள பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர்.

யுத்தம் காரணமாக,  1984ஆம் ஆண்டு இப்பகுதி மக்கள் இடம் பெயர்ந்திருந்தனர்.
2011 ஆம் ஆண்டு மீளக்குடியேற்றத் திட்டத்தின் கீழ் இங்கு வாழ்ந்த 168 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டன.

இதன்போது, அங்குள்ள அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையும் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு அதிபர் ஒருவரும் நியமிக்கப்பட்டார் .

அன்றிலிருந்து  பாடசாலையும் இயங்கி வந்த நிலையில்,  கடந்த ஐந்து மாதங்களாக தற்போழுது பாடசாலை மூடப்பட்டுள்ளதாக, தென்னைமரவாடி அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் டி .புஸ்ப்பரஸா தெரிவித்தார் 

தற்போது மாணவர்கள் படிப்பதற்கு ஆர்வம் இருந்தும் ஆசிரியர்கள் அங்கு கடமைக்கு வருகை தருவதில்லையெனவும் தெரிவிக்கின்றனர்.

குச்சவெளிக்கோட்ட பணிப்பாளர் திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர் ஆகியோர் இப்பாடசாலை மீண்டும் இயங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென, பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .