2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

பூட்டியிருந்த வீட்டுக்குள் சடலம் மீட்பு

Niroshini   / 2015 ஒக்டோபர் 27 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஒலுமுதீன் கியாஸ், ஏ.எஸ்.எம்.யாசீம்
 
கிண்ணியா, பூவரசந்தீவு கிராமத்தில் நேற்று திங்கட்கிழமை (26) இரவு பூட்டியிருந்த வீட்டுக்குள் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் ஒன்றை மீட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரித்தனர்.

கிண்ணியா, பூவரசந்தீவை சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான சாஹூல் கமீட் நஜீவுல்லா(வயது 25) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தேநீர் கடை ஒன்றில் சமையல்காரனாக வேலை செய்து வந்த குறித்த நபர்,வழமையாக அதிகாலை வேலைக்குச் சென்று பகல் நேரத்தில் வீடு திரும்புவார். அந்த நேரத்தில் பக்கத்து வீட்டில் வசிக்கும் அவரது தாயார் அவருக்கு பகல் உணவை ஒருவரிடம் கொடுத்து அனுப்புவது வழக்கமாகும்.

இதே போன்று சம்பவத்தினத்தன்று அவரது தாயார் பகல் உணவை கொடுத்தனுப்பியபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. மாலை வரையும் வீடு திறக்கப்படாததால் சந்தேகத்தின் பேரில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு கதவை உடைத்து பார்த்தபோதே அவர் சடலமாக காணப்பட்டார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரின் மனைவி மத்திய கிழக்கு நாடொன்றில் பணிப் பெண்ணாக பணிப்புரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .