Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Thipaan / 2016 ஜூலை 14 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா,எம்.என்.எம்.புஹாரி
பெண்ணொருவரின் கத்திக்குத்துக்கு இலக்காகி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஐந்து பிள்ளைகளின் தாயொருவர், இன்று இரவு 8.45 மணியளவில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம், திருகோணமலை சேனையூர் பகுதியில் இன்று வியாழக்கிழமை (14) பிற்பகல் 3.15க்கு இடம்பெற்றுள்ளது.
கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்தப் பெண், சம்பூர்- சேனையூர் பகுதியைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தாயாரான இளங்குமார் சாந்தமலர் (41 வயது) என, பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது:
கத்திக்குத்துக்கு இலக்கான குறித்தபெண், இரண்டு வருடங்களுக்கு முன்னர் பக்கத்து வீட்டுப் பெண்ணின் மகளுக்கு இரண்டு இலட்சம் ரூபாயை, வட்டிக்குக் பெற்றுக்கொடுத்துள்ளார்.
அந்தப் பணத்தை மீளச் செலுத்தாமையால் அதுதொடர்பில், பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டதில் இருந்து, பக்கத்துவீட்டுப் பெண், ஒவ்வொரு நாளும் திட்டிக்கொண்டே இருந்துள்ளார்.
இந்நிலையே இவ்விருவருக்கும் இடையில் குரோதம் வளரக் காரணமானது. இந்த விவகாரம் தொடர்பில் இன்றைய தினமும் வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியுள்ளது. இந்நிலையிலேயே, இந்தக் கத்திக்குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago