Thipaan / 2016 நவம்பர் 01 , மு.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை நககரை அண்மித்த விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வின் போது, மது அருந்திவிட்டு பொது மக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 12 பேரையும், தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் செல்லுமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதவான் டி.சரவணராஜா, நேற்றுத் திங்கட்கிழமை (31) உத்தரவிட்டார்.
கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 12 பேரையும், பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி நீதிமன்றத்துக்குச் சமுகமளிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, களியாட்ட நிகழ்வினை பார்வையிட சென்றிருந்த இரண்டு பேர் தாக்குதலுக்குள்ளான நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், தாக்குதல் நடாத்திய சந்தேகநபர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் திருகோணமலை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago