2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

புதையல் தோண்டிய மூவருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2016 மார்ச் 19 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை, புல்மோட்டை, தலுக்கலப் பகுதியில் புதையல் தோண்டிய மூன்று பேரையும், திருகோணமலை நீதிமன்ற நீதவான் கயான் மீ கஹகே, எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று வெள்ளிக்கிழமை (18) உத்தரவிட்டார்.

பொலிஸருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து நேற்று (18) மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது நான்கு பேர் அவ்விடத்தில் இருந்ததாகவும் அதில் ஒருவர் தப்பியோடியதாகவும் அவரைக் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள், புல்மோட்டை மற்றும் மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .